கள்ள காதலிய செட் பண்ணிக்கலாம்னு நெனக்கிறேன்
புருஷன்: அட போடா மச்சான்.. கல்யாண வாழ்க்கையே வெறுத்து போச்சு.. ஒரே போர் அடிக்குது..
நண்பன்: நீ ஏன் ஒரு கள்ள காதலிய வச்சிக்க கூடாது..
புருஷன்:- சரியா போச்சு.. என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா எனக்கு பேய் ஒட்டிடுவா..
நண்பன்: அப்படின்னா மொதல்ல உன் பொண்டாட்டி கிட்ட நைசா பேசி கள்ள காதலி வச்சிக்க சம்மதம் வாங்கிடு.. அப்புறம் எந்த பிரச்சினையும் இல்லாம என்ஜாய் பண்ணலாம்.. சரியா..?
இந்த யோசனை சரியாபடவே அன்னிக்கு நைட்டே பொண்டாட்டிகிட்ட பேச போனான்.
புருஷன்: டார்லிங்.. நான் இப்ப பேச போற விஷயம் உனக்கு கோபத்தை வர வைக்கலாம்.. ஆனா கொஞ்சம் பொறுமையா கேளு..
பொண்டாட்டி: சொல்லுங்க என்ன விஷயம்.. நான் கோப படமாட்டேன்..
புருஷன் : எனக்கு நம்ம கல்யாண வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சுடுச்சு.. அதனால நான் ஒரு கள்ள காதலிய செட் பண்ணிக்கலாம்னு நெனக்கிறேன்.. நீ என்ன சொல்ற..
பொண்டாட்டி: அப்படி ஒரு எண்ணம் இருந்தா அத சுத்தமா மறந்துடுங்க சரியா.. நான் ஏற்கனவே இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாத்துட்டேன் ஒண்ணும் ஒத்து வரல…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக