8/12/11

என்னையே நான் மாற்றினேன்

என்னையே நான் மாற்றினேன்

  என்னையே நான் மாற்றினேன்
சமர்பித்தவர் manmadhan | தேதி November 19, 2011

அன்று அந்த டீம் லீடர் கொடுத்து படிக்க சொன்ன பைலை நன்றாக படித்து, நாம் என்ன வேலை செய்ய வேண்டும் என்பது சற்று புரிந்தது. மதியம் சாப்பாட்டு டைம் வந்ததும். எல்லோரும் கம்பனியின் கேண்டீனுக்கு செல்ல ஆயத்தமானார்கள். என்னையும் எங்கள் டீமில் இருந்த சரவணன் அழைத்தான். அவன்தான் எனக்கு கம்பனியில் கிடைத்த முதல் பிரெண்ட். அவனுடன் நான் செல்ல, நேராக ஒரு நான்கு பேர் ஏற்கனவே அமர்ந்து இருந்த டேபிளுக்கு என்னை அழைத்து சென்றான்.

மற்றவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் எல்லோரும் ஒரே டீம்தான் என்றான். இனிமேல் இவர்கள் தான் எனக்கு எல்லாமே என்று ஆகிவிட்டது. அந்த நான்கு பேரில் இரண்டு பேர் பெண்கள். அவர்களை கை குளிக்கியபோது எனக்கு புல்லரித்தது. அவர்கள் ச்பரிச்ச்சமே அப்படி இருந்தது. ஒரு ஐந்து நிமிடங்களில் இன்னும் மூன்று பேர் வந்தனர். அவர்கள் மூவரும் பெண்கள். ஆர்களுக்கும் கை குலுக்கி அறிமுகம் ஆனபின் எல்லோரும் சாப்பிட அமர்ந்தோம். என் இரு பக்கத்திலும் பெண்கள் உட்கார, எனக்கு கிளுகிளுப்பாக இருந்தது.


என்னை பற்றி எல்லா விவரங்களையும் என்னோடு நன்றாக பேசி கறந்தார்கள். என் கிராப்புற சூழலையும் கேட்டு அறிந்தார்கள். அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச நான் கொஞ்சம் தடுமாறினேன். அதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அப்போது என் பக்கத்தில் இருந்த ராணிதான் என்னை ஆங்கிலத்திலையே பேச உற்சாக படுத்தினாள். கொஞ்ச நேரத்தில், சாப்பாடு முடிவதற்கு முன்னதாகவே என்னோடு எல்லோரும் நன்றாக பழகி, நீண்ட நாள் நண்பர்கள் போல ஆனோம். இப்போது அவர்களிடம் நான் கூச்சபடாமல் இருப்பது எனக்கே ஆச்சிரியமாக இருந்தது.


எல்லோரும் சாப்பாட்டு முடிந்துவிட்டு எங்கள் டிபார்ட்மென்ட்டுக்கு சென்றோம். கொஞ்ச நேரம் அரட்டை அடித்துவிட்டு, கரெக்டாக இரண்டு மணிக்கு சொல்லிவைத்தார்போல எல்லோரும் தங்கள் சீட்டுக்கு சென்றனர். அப்புறம் யாரும் அரட்டை அடிப்பதை நான் பார்கவே இல்லை. எல்லோரும் போனிலும், கம்பியூடரிலும் பிசியாக இருந்தனர். நான் கொஞ்சம் சந்தேகம் என்று சரவணனிடம் சென்றபோது, அவன் அவசரமாக என்னை டீம் லீடரிடம் கை காட்டிவிட்டு அவன் வேளையில் ஈடுபட்டான். எனக்கு அவன் போக்கு விசித்திரமாக இருந்தது.


அப்படி நன்றாக பழகிவிட்டு, வேலை என்று வந்தால் சொல்லி கொடுக்க நேரம் இல்லாது எனக்கு அது புதிதாய் இருந்தது. ஆனால் இங்கே வேலை இப்படிதான் என்று புரிந்து கொண்டேன். நேராக டீம் லீடரிடம் சென்றேன். சந்தேகத்தை கேட்டேன். அப்போது அவர் என்னை அமர சொன்னார். நான் அமர அவர் இங்கு வேலை பார்க்கும் கண்டிஷன்களை சொல்ல ஆரம்பித்தார். ஒரு நாளுக்கு இத்தனை கால் செய்ய வேண்டும், வெளி வேலை கொடுத்ததால், எத்தனை பேரை பார்க்க சொளிகிரோமோ அதனை பேரை அன்றே பார்த்து முடித்து ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்று கறாராக சொன்னார்.

கருத்துகள் இல்லை: